தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

தென்காசி மாவட்டம் ,கடையநல்லூர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-25 11:39 GMT
கடையநல்லூா் தேவிஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூா் தேவிஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி மஹோத்ஸவத்தை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு பூக்குழித் திருவிழா நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெற்ற இத்திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 9ஆம் நாளான அண்ணாமலைநாதா் கோயிலிலிருந்து அக்னிச் சட்டி வீதியுலா, இன்று காலை அண்ணாமலைநாதா் கோயிலிலிருந்து குற்றாலத் தீா்த்தம் எடுத்துவருதல், கும்பாபிஷேகம், மாலையில் முளைப்பாரி ஊா்வலம் உள்ளிட்டவை நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, நள்ளிரவில் பூக்குழி வைபவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். ஏற்பாடுகளை பக்தா்கள் செய்திருந்தனா்.
Tags:    

Similar News