நிரம்பியது பூண்டி ஏரி; 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பூண்டி ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2023-12-19 09:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் தற்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகம் – ஆந்திரா எல்லையான கிருஷ்ணாபுரம் பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அங்குள்ள அம்மம்பள்ளி அணை நிரம்பியதால் அந்த அணையில் இருந்து விநாடிக்கு 300 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது 8 கி.மீ. தூரம் பயணித்து தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கலந்து பின்னர் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.

பருவ மழையின் காரணமாக வரத்து கால்வாய்கள் மூலம் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்றுகாலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 700 கன அடியாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாடிக்கு 1000 கன அடி உபரிநீர் திறக்கப்படுள்ளது. நீர்வரத்து தொடர்ந்துஅதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நீர்த்தேக்கத்தில் இருந்து மிகைநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்கள் மற்றும் இரண்டு புறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News