சமூக வலைத்தளத்தில் போஸ்: வசமாக சிக்கிய திருடன்
கீரனூரில் பைக்கை திருடி சமூக வலைதளத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-20 13:02 GMT
கோப்பு படம்
கீரனுார் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் பைக்குடன் வாலிபர் ஒருவர் போஸ் கொடுத்தபட புகைப்படம் வெளியானது.
இதை பார்த்த ஒருவர் அந்த புகைப்படத்தில் இருப்பது காணாமல்போன தனது பைக் என்பதை கண்டறிந்து கீரனுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருச்சி காஜாபேட்டையை சேர்ந்த காஜாமைதீன்(24) என்பதும்,
கீரனுார் பகுதியில் 2 பைக்குகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து காஜாமை தீனை கைது செய்த போலீசார் பைக்கு களை பறிமுதல் செய்தனர்.