தருமபுரியில் தபால் வாக்கு பதிவு: ஆட்சியர் ஆய்வு

தருமபுரியில் நடைபெற்ற தபால் வாக்கு பதிவை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-15 16:38 GMT

தபால் வாக்கு பதிவை ஆய்வு செய்த ஆட்சியர்

தமிழகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19- ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் பிற பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில்,

இடம்பெற்றுள்ள தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள். நுண் பார்வையாளர்கள், காவல்துறை அலுவலர்கள், காவலர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக தருமபுரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு வாக்குப் பதிவு மையம் (Facilitation Center) அமைக்கப்பட்டுள்ளது.

13.04.2024 அன்று 03.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் (வாக்குச்சாவடி அலுவலர்கள்.காவல் துறை அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் நீங்கலாக) மற்றும் 15.04.2024 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காவல்துறை அலுவலர்கள், நுண்பார்வையாளர்களும் (Micro- observers) மேலும் 13.04.2024 அன்று வாக்களிக்க இயலாதவர்களும் சிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் தபால் வாக்குகள் செலுத்துகின்றனர்.மேலும், சிறப்பு வாக்குப் பதிவு மையத்தில் (Facilitation Center) வாக்குப்பதிவு நிகழ்வுகளை தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்/அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பார்வையிட்டார்கள்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) வெங்கடேசன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News