கோவை லங்கா கார்னரில் போஸ்டர்கள் ஒட்ட தடை
கோவை லங்கா கார்னரில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இன்றைய காலகட்டத்தில் தேர்தல் பணிகளில் போஸ்டர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பல்வேறு கட்சிகள் போஸ்டர் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்புகளையும் தங்கள் கட்சியின் செல்வாக்கையும் தெரிவித்து வருகின்றனர். கோவை மாநகரைப் பொறுத்தவரை லங்கா கார்னர்,நஞ்சப்பா சாலை,கோட்டைமேடு, ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் அவர்களது போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
குறிப்பாக லங்கா கார்னர் பகுதி என்பது ரயில் நிலையம், அரசு மருத்துவமனை,டவுன்ஹால் செல்லும் பகுதியின் முக்கிய சந்திப்பு என்பதால் இங்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் பார்வைக்கு எளிதில் சென்றடையும். இந்நிலையில் லங்கா கார்னர் பகுதியில் வழக்கமாக போஸ்டர்கள் ஒட்டும் இடம் முழுவதும் பச்சைத் துணி கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.