பொத்தனூர் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

Update: 2024-05-28 16:11 GMT

தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் 

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் புதுப்பாளையம் மகா மாரியம்மன் கோயில் தீமிதி  திருவிழா கடந்த 12-ஆம் தேதி இரவு கிராம சாந்தி,கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

13-ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 17-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், ஞாயிற்றுக்கிழமை மறு காப்பு கட்டுதலும் நடைபெறுகிறது. திங்கட்கிழமை முதல் வரும் 25-ஆம் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம்,

அன்னபட்சி, காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26-ஆம் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வுளான தீமிதி  திருவிழா நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள  பூ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். பின்னர் நாளை 29-ஆம் தேதி பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

30-ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி மஞ்சள் நீராடலும்,  இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 1-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 2-ஆம் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்னபாவாடை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் மற்றும்  ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

Tags:    

Similar News