மின்வாரிய தற்காலிக ஊழியர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், குருவார்பட்டி கிராமத்தை சேர்ந்த மின்வாரிய தற்காலிக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-02-05 03:44 GMT
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள குருவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ஆல்பர்ட் மகன் லிவிங்ஸ்டன் பர்னபாஸ் (52), இவர் விளாத்திகுளம் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.