கூலி உயர்வு கோரி விசைத்தறி நெசவாளர்கள் சாலை மறியல்

கூலி உயர்வு கோரி சாலைமறியலில் ஈடுபட்டு கைதான விசைத்தறி நெசவாளர்களை விடுவிக்க கோரி 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-27 05:21 GMT

சாலை மறியல் 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை மற்றும் திருத்தணி சுற்றுவட்டார் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். நெசவாளர்கள் ஏஜெண்டுகளிடமிருந்து நூல் மற்றும் பாவுப் பெற்று லுங்கி உற்பத்தி செய்து கூலி பெற்று வருகின்றனர்.  மீட்டர் ஒன்றுக்கு ரூ. 10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று முக்கிய கோரிக்கை  வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் நெசவாளர்கள் ஏஜெண்டுகள் சார்பில் நடைபெற்ற  இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை கடந்த வாரம் வருவாய்  கோட்டாட்சியர் தீபா தலைமையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில்  பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் இன்று அத்திமாஞ்சேரி பேட்டையில் 50-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் சாலை ஓரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்து . பின்னர் ஆர்.கே.பேட்டையில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதை அறிந்து விசைத்தறி நெசவாளர்கள் கைது செய்தவர்களை விடிவிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் எங்களையும் கைது செய்யுங்கள் என்று  திருமண மண்டபத்துக்கு முன்பு 200க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News