பி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு 

தஞ்சாவூர் மாவட்டத்தில் பி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-15 16:04 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் பி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிபிஎம் நிறுவனத் தலைவர்களில் ஒருவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஸ்தாபகத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட நாயகன், தோழர் பி.ராமமூர்த்தியின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாநகரக்குழு சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகில், நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு கட்சியின் மாநகரச்செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார்.

தோழர் பி.ஆர். உருவப்படத்திற்கு மூத்த தலைவர் என்.சீனிவாசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, களப்பிரன், மாநகரக்குழு உறுப்பினர்கள் வீ.கரிகாலன், சி.ராஜன், எம்.ராஜன், எம்.கோஸ்கனி, பி.சத்தியநாதன், தஞ்சாவூர் மாமன்ற உறுப்பினர் வைஜெயந்திமாலா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் த.முருகேசன், மற்றும் கிளைச் செயலாளர்கள், அரங்கத் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி கிளைகள் சார்பில், மூத்த தோழர் வழக்குரைஞர் வீ.கருப்பையா தலைமையில், மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தஞ்சாவூர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், கிளைத் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, ஆட்டோ சங்க செயலாளர் ராஜா, விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியு துணைத் தலைவர் பி.வெங்கடேசன், கும்பகோணம் மண்டல சிஐடியு நிர்வாகிகள் ராமசாமி, முருகானந்தம், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் ஜீவா, திருநாவுக்கரசு, தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News