காளான் வளர்ப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்

காளான் வளர்ப்பு குறித்து விவசாயியிடம் வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

Update: 2024-05-18 13:31 GMT

காளான் வளர்ப்பு குறித்து விவசாயியிடம் வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே செருவாவிடுதி கிராமத்தில், வேளாண் கல்லூரி மாணவர்கள், காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், கிராம வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் மூலமாக, செருவாவிடுதியை சேர்ந்த விவசாயி இளங்கோவனுக்கு காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது காளான் வளர்ப்பு செய்முறையை விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.  இதில், வேளாண் கல்லூரி  இறுதி ஆண்டு மாணவர்கள் முத்து ஈஸ்வரன், ஹர்சத், கௌசிக், கலை தேவா, கலையரசன், கார்த்திக், கார்த்திகேயன், கிருபாகரன், மதன், மனோஜ், மனோஜ்குமார், முகிலன் ஆகியோர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.
Tags:    

Similar News