சோமசமுத்திரத்தில் ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை

சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது.

Update: 2024-05-21 08:48 GMT

சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் சிவபெருமானுக்கும், நந்திபகவானுக்கும் பால், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News