சோழீஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள அரசிராமணி சோழீஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-01-24 01:28 GMT
பிரதோஷ வழிபாடு
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமர் அருள்மிகு சோழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால் தயிர் சந்தனம் திருமஞ்சனம் பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டனர்.