பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-24 07:41 GMT

பிரதோஷ வழிபாடு 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று தை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News