சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு
பூபதி திருமண மண்டபம் அருகே இளம்பிள்ளை உள்ள அருள்மிகு சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.;
பூபதி திருமண மண்டபம் அருகே இளம்பிள்ளை உள்ள அருள்மிகு சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் தரிசனம்.
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அனசபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூபதி திருமண மண்டபம் அருகே மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. நேற்று இரவு சித்தலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் சித்தலிங்கேஸ்வரருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் விபூதி மஞ்சள் குங்குமம் இளநீர் பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. பிறகு சித்தலிங்கேஸ்வரருக்கு அலங்கரித்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் நெய் திபங்களை ஏற்றி வழிபட்டனர்.கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் டி என் லோகநாதன் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.