சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கள்ளக்குறிச்சியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-05-21 02:18 GMT

 கள்ளக்குறிச்சியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

கள்ளக்குறிச்சி சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று வளர்பிறை பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது. கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு மற்றும் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர், பல்லகச்சேரி ராமநாதீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
Tags:    

Similar News