பூத்தாலீஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி பூத்தாலீஸ்வரருக்கு நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-10 00:44 GMT

பிரதோஷ சிறப்பு வழிபாடு

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த பூத்தலாக்குட்டை பூத்தாழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூத்தாலகுட்டை, பூத்தாழிஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பூத்தாலீஸ்வரர் நந்தி பகவான் சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். இதே போல் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் கோவிலில் அருள்மிகு சோமேஸ்வரர் நந்தி பகவான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரம் செயய்ப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரு கோவில்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.
Tags:    

Similar News