நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஆலோசனை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினருக்கு எஸ்பி தேர்தல் குறித்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கினார்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-15 09:20 GMT
நாகை மாவட்டத்தில் வருகின்ற 2024 - பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் வாக்குப்பதிவு நாளன்று சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அறிவுரை வழங்கினார்கள்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை மாவட்ட அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.