அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை

தரங்கம்பாடி அருகே கீழப்பெரும்பள்ளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Update: 2024-02-10 16:45 GMT

அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் 119 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா கீழபெரும்பள்ளம் ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், கிடங்கல், மருதம்பள்ளம், மாமாகுடி, தருமகுளம், மேலையூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்லை இந்த கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், இங்கு உள்ள நெல் தூற்றும் இயந்திரத்திற்கு அருகாமையிலேயே வியபாரிகளின் நெல் மூட்டைகள் அடுக்கி இருப்பதாகவும், விவசாயிகள் கொண்டுவரும் நெல்மூட்டைகள் தூரத்தில் அடுக்கி வைத்திருப்பதாகவும், வாடகைக்கு தார்படுதாய் போட்டும் நெல் மூட்டைகளை பாதுகாத்து வருவதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும், அறுவடைக்கு தயாரான நேரத்தில் மழையால் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டதாகவும், பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்ய வந்தால் வியாபாரிகளின் நெல் மூட்டைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் விவசாயிகளை அலைக்கழிப்பதாகவும்,

இப்பகுதிகளுக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags:    

Similar News