மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆயத்த கூட்டம் !
தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் பணியில் வாகன சோதனையின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் ஆயத்த கூட்டம் நடைபெற்றது. ;
By : King 24x7 Angel
Update: 2024-03-20 05:44 GMT
ஆயத்த கூட்டம்
தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெற உள்ளதை தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று 19.3.24 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், இகூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ப.ராஜகுரு ஆகியோர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.