மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் தயார் நிலை - கலெக்டர் கார்மேகம் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்

Update: 2023-12-05 05:56 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் தொங்கும் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்மேகம், அருள் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது: மாற்றுத்திறனாளி என பலவீனமாக கருதாமல், பலமாக எடுத்துக் கொண்டு வளரவேண்டும். சமூகத்திற்கு திறனை உணர்த்துவதற்காகவே மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரத்து 58 பேர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை, கல்வி உதவித்தொகை வழங்குவதோடு, சுய வேலைவாய்ப்புத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, செவித்திறன் குறைபாடு உடைய 100 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ. 6 கோடியே 70 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்படு கிறது. இந்த பணி விரைவில் நிறைவடைய உள்ளது. மாவட்டத்தில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்புப் பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களில் 907 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் பச்சையப்பனுக்கும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அஸ்தம்பட்டி மண்டல குழுத்தலைவர் உமாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News