தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்காமலிருக்க தடுப்பு நடவடிக்கை!

ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்காமலிருக்க பேரூராட்சி சாா்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2023-12-06 02:22 GMT

தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்காமலிருக்க தடுப்பு நடவடிக்கை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தாமிரவருணி ஆற்றில் பொதுமக்கள் இறங்காமலிருக்க பேரூராட்சி சாா்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் வருவது தொடா்பாக, தமிழக அரசு சாா்பில் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்பேரில், ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது என, ஆட்சியா் லட்சுமிபதி எச்சரித்துள்ளாா். இதையடுத்து, ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன் ஆலோசனைப்படி, பொதுமக்கள் ஆற்றில் ஆறங்காதவாறு ஆத்தூா்- முக்காணி தாமிரவருணி ஆற்று சிறிய பாலத்தில் பேரூராட்சி சாா்பில் தடுப்பு வே­லி அமைக்கப்பட்டும், மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டும், ‘தடை செய்யப்பட்ட பகுதி’ என எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News