சங்கராபுரம் பகுதியில் பகலில் பூசாரி இரவு பைக் திருடன்

சங்கராபுரம் பகுதியில் பகலில் பூசாரி இரவு பைக் திருடன் மாறியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-18 16:13 GMT

காவல் நிலையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவர் கைது: 6 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதி அமைந்துள்,

பார்சல் சர்வீஸில் வேலை செய்து வரும் சாமிநாதன் மகன் ஏழுமலை என்பவருடைய இருசக்கர வாகனம் கடந்த வாரம் திருடு போன நிலையில் இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சி கொண்டு காவல்துறை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

Advertisement

அப்பொழுது சங்கராபுரம் மும்மனை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது கணியாமூர் கிராமத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ராஜேஷ் என்பவர் திருட்டு இருசக்கர வாகனத்தில் வந்ததை எடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரண்பாக பேசியத அடுத்து தீவிர விசாரணை செய்தனர்.

இதில் மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்ததை அடுத்து அவரிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர், கோவில் பூசாரி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News