தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்தில் நடந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-14 09:24 GMT

செயற்குழு கூட்டம் 

மல்லசமுத்திரத்தில் நடந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற ஒன்றிய செயற்குழு கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவகி, ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் செந்தில்வடிவு, ஒன்றிய துணைத்தலைவர்கள் லோகநாதன், ஜெயா, ஒன்றிய துணைச்செயலாளர் தியாகராஜன் சிறப்புரையாற்றினர். செயற்குழு உறுப்பினர் சக்திவேல் நன்றியுரையாற்றினார்.

இதில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்திட வேண்டும். இடைநிலை, சாதாரணநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைந்து சரிசெய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அலுவலக நிர்வாகப் பதிவேடுகள் வாங்குவதற்கும், வகுப்பறை கரும்பலகையில் எழுதுவதற்கு சுண்ணக்கட்டிகள் வாங்குவதற்கும், கல்வி வளர்ச்சி நாள், விடுதலைநாள் விழா, குடியரசு நாள்விழா போன்ற அரசு விழாக்கள் கொண்டாடுவதற்கும் மற்றும் மாணாக்கர் சேர்க்கை இயக்கம் போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கும் போதுமான அளவில் நிதி ஒதுக்கீடுகள் செய்திட வேண்டும்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வித்துறையின் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலருக்கு அலுவலக அமைச்சுப்பணியாளர் பிரிவில் இருந்து நேர்முக அலுவலர் நியமனம் செய்யப்படுவது போன்று தொடக்கப்பள்ளிகளில் இருந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக அலுவலராக நியமனம் செய்திட வேண்டும். ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் 11 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் நாளை ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் வருகிற 26ல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆகியவற்றில் மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற் வேண்டும்.

டிட்டோஜாக் அமைப்பு அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலத்தலைநகர் சென்னையில் எதிர்வரும் 19ல் நடைபெறும் உரிமை மீட்டு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News