தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

அரசாணை 243 ஐ திரும்ப பெற வலியுறுத்தி ஊத்தங்கரை வட்டார கல்வி மையம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-12 04:31 GMT

ஆர்ப்பாட்டம் 

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார கல்வி மையம் முன்பு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி என் மூர்த்தி வட்டாரத் துணைத் தலைவர் தலைமையில், மோகன் குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் நான் ஜோதி மாவட்ட தலைவர் வலைதள அமைப்பு மாவட்ட பார்வையாளர் திரு ஆர் முருகன் மாவட்ட துணைத் தலைவர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மா செந்தில்குமார் வட்டார செயலாளர் விளக்கவுரை ஆற்றினார். இதில் 243 அரசாணையை திரும்பப் பெற்று பழைய நடைமுறையில் முன்னுரிமை அளிதிடவும், பதவி உயர்வை உடனடியாக பழைய நடைமுறையில் வழங்கிடவும்,ஊதிய முரண்பாட்டை சரி செய்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிடவும்,அரசு பள்ளிகளுக்கு வழங்குகிற அனைத்து சலுகைகளையும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்கிடவும்,ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி நிலுவை இவைகளை உடனே வழங்கிட வேண்டும். உயர்கல்வி படிப்பிற்கு ஊக்கஊதியம் தொடர்ந்து வழங்கிடவும்,எமிஸ் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்திட வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட,தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றிட, உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரை வட்டார கல்வி மையம் முன்பு நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆனந்தன் மற்றும் பொருளாளர் நா தங்கராஜ் வட்டார நன்றியுரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பல திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News