தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சத்திய நாராயணன் சிட்டி பகுதியில் தனியார் பேருந்து புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.;

Update: 2024-05-25 09:32 GMT
தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து

விபத்து 

  • whatsapp icon

தம்மம்பட்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு துறையூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது துறையூர் தம்மம்பட்டி சாலையில் உள்ள சத்திய நாராயணன் சிட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் பேருந்தின் இரும்பு சட்டங்களை வெட்டி ஓட்டுநரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பயணிகள் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 8 வயது சிறுமி உள்பட 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News