தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்திற்க்கு வழி விட மறுப்பு
குமாரபாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்திற்க்கு வழி விட மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்தை விட மறுத்தார். குமாரபாளையத்திலிருந்து ஈரோட்டிற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. ஈரோடு ஜவுளி சந்தை என்பதால்,
குமாரபாளையம் நகரில் உற்பத்தியாகும் விசைத்தறி ஜவுளி ரகங்களை விற்பனைக்கு பேருந்தில் கூட கொண்டு செல்வது வழக்கம். மேலும் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் ஈரோடு மார்க்கெட்டிலிருந்து வருவதும் வழக்கம். குமாரபாளையம் அருகே உள்ள நகர பகுதி என்பதால்,
பொதுமக்கள் ஜவுளிகள், நகைகள் வாங்கவும், வருடாந்திர மளிகை பொருட்கள் வாங்கவும் பேருந்துகளில் சென்று வருவது வழக்கம். மேலும் உடல்நலம் சரியில்லாத நபர்களை குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து சென்றாலும், ஆபத்தான நிலை என்றால், ஈரோடு ஜி.ஹெச்.க்கு நோயாளியை அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
இதனால் நோயாளிகளை பார்க்கவும் ஈரோட்டிற்கு பேருந்துகள் மூலம் சென்று வருகிறார்கள். சில தனியார் மருத்துவமனைகளும் இருப்பதால், அங்கும் பொதுமக்கள் சென்று வருகிறார்கள். ஈரோடு பேருந்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் நேற்று காலை 08:30 மணியளவில் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே டிமைங் தகராறு காரணமாக தனியார் பேருந்து, அரசு பேருந்தை செல்ல விடாமல், பேருந்தின் முன்பு, தனியார் பேருந்தை நிறுத்திக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இவர்களுக்கு பின்னால் வந்த பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பயணிகள் அவதி ஆளாகினர். டைமிங் தகராறு என்றால், ஒரு இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். அல்லது போலீசில் சொல்லி தீர்வு காண வேண்டும். இவ்வாறு செய்வதால் இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடிக்கடி இது போல் நடக்கும் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். -