மருத்துவ கழிவுக்கு தீ- தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்

கழுவன்திட்டையில் மருத்துவ கழிவுக்கு தீ வைத்த தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Update: 2024-03-15 07:18 GMT

மருத்துவ கழிவிற்கு தீ வைப்பு 

குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமத்திலகம் உத்தரவின் பேரில், சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையில் ஊழியர்கள் மார்த்தாண் டம், குழித்துறை பகுதியில் அவ்வப்போது சோதனை நடத்தி பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையில் ஊழியர்கள் குழித்துறை கழுவன்திட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் திடீரென்று சோதனை செய்தனர்.அப்போது மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் செப்டிக் டேங்க் கழிவு அருகில்உள்ள தோட்டத்தில் திறந்து விட்டு பக்கத்தில் உள்ள பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது  தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்து வமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மருத்துவமனை சார் பில் உடனடியாக அபராத தொகை நகராட்சி அலுவலகத்தில் செலுத் தப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் தெரிவித்தார்.

Tags:    

Similar News