தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
பழனி, அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லுாரியில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.;
Update: 2023-12-02 12:45 GMT
பழனி, அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லுாரியில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லுாரியில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் 120 தனியார் நிறுவனங்கள் பற்கேற்றுள்ளன. 600 க்கும் அதிகமான படித்த வேலைவாய்ப்பற்றோர் பற்கேற்றனர்.