பெரம்பலூரில் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

பெரம்பலூரில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில்,வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2024-02-04 09:12 GMT

மாணவர்களுக்கு பரிசு  வழங்கல்

 ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-12-ஆம் "சர்வதேச இளைஞர்" தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் தனலெஷ்மி சீனிவாசன் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் திருநங்கைள் பங்கேற்ற மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான குழு போட்டியும் நடைபெற்று வந்தது, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் திருநங்கை கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு, பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் முதல் பரிசாக ரூ.10,000/மும், இரண்டாம் பரிசாக ரூ.7.000/மும், மூன்றாம் பரிசாக ரூ.5,000/மும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் அதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கான மேடை நாடகப்போட்டி நடைபெற்றது.

இதில் வேப்பந்தட்டை. வேப்பூர் மற்றும் பெரம்பலூர், அரசு கலைக்கல்லூரி , அன்னை ஆயிஷா மகளிர் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, தனலெஷ்மி சீனிவாசன் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, தனலெஷ்மி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மற்றும் தனலெஷ்மி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் குழுவாக பங்கேற்றார்கள்.

இதில் வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி முதலிடமும், தனலெஷ்மி சீனிவாசன் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி இரண்டாமிடமும், வேப்பூர் அரசு கலைக்கல்லூரி மூன்றாமிடத்தையும் பிடித்தார்கள். இவர்கள் பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டன மேலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் பங்குபெற தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டது, இந்நிகழ்வில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் மருத்துவர். விவேகானந்தன், தனலெஷ்மி சீனிவாசன் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி முதல்வர் மருத்துவர் வெற்றிவேல், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை, கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் . பழனிவேல்ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்

Tags:    

Similar News