நீட் ,ஜெஇஇ மாதிரி தேர்வில் வென்ற மாணவர்வர்களுக்கு பரிசு

நீட் மற்றும் ஜெ இ இ பயிற்சி வகுப்பு மாதிரி தேர்வில் வெற்றி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Update: 2024-02-12 01:47 GMT
மாணவர்களுடன் ஆட்சியர் 
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள்  மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நீட்   மற்றும் ஜெ இ இ பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.  எவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும், மாநகராட்சியின் சார்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் பொறியியல் பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.  மாட்ட ஆட்சி த்தலைவர் பி.என்.ஸ்ரீதர், பரிசுகள் வழங்கி   மாணக்கர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களின் தேர்வுகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.     நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர்.பாலதண்டாயுதபாணி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டார்கள்.
Tags:    

Similar News