கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் நடந்த மாவட்ட அளவிலான கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.;

Update: 2023-12-22 06:58 GMT

மாணவிகளுக்கு பரிசு 

கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மாவட்ட அளவிலான கையெழுத்து போட்டி நடந்தது. தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான போட்டியில், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவி சாரதா தேவிக்கு முதல் பரிசாக 7,000 ரூபாய். ஏறையூர், புனித சார்லஸ் கல்லுாரி மாணவி செல்லத் ஏன்சிக்கு இரண்டாம் பரிசாக 5,000 ரூபாய்.ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லுாரி மாணவி புவனேஸ்வரிக்கு மூன்றாம் பரிசாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News