மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த செயல்முறை விளக்கம்

செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில், வேலூருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Update: 2023-12-15 09:57 GMT

செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில், வேலூருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் பொருட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், அனுப்பி வைத்தார்.

பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்தார். ஏதிர் வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் – 2024 ற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு கருவி 2096 வாக்குப்பதிவு இயந்திரம் 4879 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி 1937 என இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் அளிக்கும் பொருட்டு மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் வழங்கப்படுகின்றன. மேலும் செயல்முறை விளக்கம் அளிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் இருப்பு வைக்கப்படவுள்ளன.

Tags:    

Similar News