இராஜாக்கமங்கலத்தில்   கைவினைப்பொருட்கள் தயாரிப்பு: கலெக்டர் ஆய்வு 

இராஜாக்கமங்கலத்தில்   கைவினைப்பொருட்கள் தயாரிப்பை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-30 10:05 GMT
மகளிர் திட்ட கைவினை பொருட்கள் தயாரிப்பை பார்வையிட்ட கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்காளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இன்று (30.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,

ன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாயிலாக பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவற்றினை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புத்தேரி மல்லிகை மகளிர் SHG  உறுப்பினர்கள் 12 பேர்  இணைந்து 24 வகை தானியங்கள் மற்றும்  சத்துமாவு உற்பத்திமையம் பார்வையிடப்பட்டது.   

  மேலும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் ரோஜா சகோதார வாழ்வு சங்கம் உறுப்பினர்கள் மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சமுதாய முதலீட்டு நிதி கடன் தொகை ரூ.2 இலட்சம் பெற்று  சங்கு பொருட்கள் உற்பத்தி  செய்யும் பணியினை நேரில் பார்வையிடப்படுள்ளது.

இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் மகளிர் திட்டம் திட்ட  இயக்குநர் பீபீ ஜான், துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News