தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் கைது
ராசிபுரம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சுமார் 265 கிலோ பறிமுதல் செய்து கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன், அவர்களின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 13.6.24-ம் தேதி இராசிபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இராசிபுரம் போலீசார் மேட்டுக்காடு ரோடு சபரி நகரில் உள்ள சையது முஸ்தபா (58), த/பெ. அப்துல் ஜாபா, முல்லா சாகிப் தெரு. இராசிபுரம் என்பவரின் கருவாட்டு குடோனில் விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சுமார் 265 கிலோ வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, இராசிபுரம் காவல் வழக்கு பதிவு செய்து சுமார் 25 இலட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இவ்வழக்கின் குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் சிறப்பாக செயல்பட்டு அரசால தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்த நபரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செப்து சிறப்பாக செயல்பட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன், அவர்களர் வெகுவாக பாராட்டினார்.