பறவை இனங்கள் கொண்டு வர தடை
தேனி மாவட்டத்திற்குள் கேரளாவில் இருந்து பறவை இனங்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-04-30 07:39 GMT
தேனி மாவட்டத்திற்குள் கேரள மாநிலத்தில் இருந்து கறிக்கோழிகள், கோழிக்குஞ்சுகள் கோழி முட்டைகள், வாத்துக்கள் தீவனங்கள் மற்றும் இதர கோழி பண்ணை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் மேலும் எல்லைப் பகுதிகளான குமுளி,கம்பம் மெட்டு மற்றும் போடி மட்டும் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.