திருப்பூரில் அழகிகளை வைத்து விபச்சாரம்
திருப்பூரில் மத்திய பேருந்து நிலையம் அருகே விபச்சாரம் செய்த மசாஜ் சென்டர் மேலாளரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-17 13:04 GMT
மசாஜ் சென்டரில் விபச்சாரம்
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சென்று சோதனை நடத்தியதில் அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. அங்கிருந்து 30 வயதுடைய 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மசாஜ் சென்டர் மேலாளரான மதுரை சேர்ந்த செந்தில்வேலன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.