கண்டன ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு, தமிழக அரசை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Update: 2024-01-05 15:33 GMT
ஊத்தங்கரை, ஜன.6– கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு, தமிழக அரசை கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் நித்யா, பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு டிஜிட்டல் கிராப் சர்வே பணியை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு திணித்து வருவதால், அதனைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.