கண்டன ஆர்ப்பாட்டம்
மின் வாரிய பிரிப்பு ஒப்பந்தத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Update: 2024-02-29 04:26 GMT
மின் வாரிய பிரிப்பு ஒப்பந்தத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், மின்சார வாரிய எம்ளாயீஸ் ஃபெடரேஷன் தேனி கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். 1957ம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொதுத் துறையில் இருந்து கம்பெனி சட்டத்தின் கீழ் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததை கண்டித்தும், மின் வாரிய தொழிலாளர்களை பாதுகாக்கவும், இழந்த உரிமைகளைப் பெறவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.