நாகையில் சிஏஏ சட்ட நகலை எரித்து போராட்டம்

நாகையில் சிஏஏ சட்ட நகலை காங்கிரஸ் கமிட்டி சார்பில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-16 14:02 GMT
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

இந்திய மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி நாட்டின் அமைதியைக் கெடுக்கும் குடியுரிமை திருத்த சிஏஏ சட்ட நகலை நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை வர் ஆர்.என்.அமிர்தராஜாதலைமையில் நாகப்பட்டினம் எல்ஐசி அலுவலகத்திற்கு எதிரில் CAA சட்டநகலை எரித்து போராட்டம் நடைபெற்றது.

சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜெ.ஜோர்தான் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எம்.அப்துல் காதர்,மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.தெய்வானை, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.யூசுப் மாலிம்,நாகூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.சர்புதீன் மரைக்காயர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஜி.சிங்காரவேலன், மீனவர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கே.சுந்தரவேல், மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் எஸ்.நசீர் அலி,வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திருமருகல் வடக்கு பி.ஜீவானந்தம், கீழ்வேளூர் வடக்கு எஸ்.லியோ,

மாவட்டச் செயலாளர் உ.காமராஜ்,எஸ் சி துறை மாவட்டச் செயலாளர் வி.சந்திரன்,நாகூர் நகர காங்கிரஸ் நிர்வாகி நாகூர் தாஜ், வர்த்தகர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அ.வினோத், உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று சிஏஏ சட்ட நகலை எரித்தும் அச்சட்டத்தை திரும்ப பெறவும் வலியுறுத்தி மத்திய பாசிச ஊழல் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News