திருப்பத்தூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-06 14:25 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

 திருப்பத்தூர் தனியார் வங்கிக் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயம் சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெற்றது.

இதில் முக்கிய கோரிக்கைகளாக விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கும் மற்றும் அத்தியாவசிய தேவைக்கு உண்டான பொருட்களுக்கும் அவ்வப்போது நிகழும் உற்பத்தி செலவு அடிப்படையில் விவசாயிகளே குழு அமைத்து விலை நிர்ணயம் செய்வதற்கு மத்திய அரசு நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகளை விலை நிர்ணயம் செய்யும் சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள நதிகள் ஆறுகள் மற்றும் அணைகள் அனைத்தும் தேசியமயமாக்கி விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை மத்திய அரசு தேவைக்காக பகிர்ந்து அளிக்க வேண்டும் அதற்கு உண்டான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்றி

அமல் படுத்த வேண்டும் மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் நிதியை ரத்து செய்து அதிகப்படியாக உணவு தானியம் உற்பத்தி செய்ய வேளாண் கட்டமைப்புகளுக்கு இந்த நிதியை செலவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News