கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பாளையத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2024-01-05 13:23 GMT

பள்ளிப்பாளையத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முன் தயாரிப்பு பணிகளை மத்திய அரசு செய்து வரும் நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தமிழகத்தில் அமுலானால் சிறு குறு வியாபாரிகள் மற்றும் ஏழை எளிய பொதுமக்கள், தொழில் நடத்துபவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே இத்தகைய திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.

Advertisement

அதை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, அதை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும், பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் நகரப் பிரிவு உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரக் கிளை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க செயலாளர் ஆர்.ரவி, மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் முத்துக்குமார், வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் . ஆர்ப்பாட்ட நிறைவில் உதவி மின் பொறியாளர் அலுவலகரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.....

Tags:    

Similar News