மயிலாடுதுறையில் சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்
மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சையில் உயிரிழந்த சிறுவன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளதார்;
மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சையில் உயிரிழந்த சிறுவன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளதார்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் ஏழாம் வகுப்பு படித்து வந்த கிஷோர் என்ற மாணவனுக்கு வயிற்றுவலி காரணமாக கடந்த 29ம் தேதி மயிலாடுதுறையில் உள்ள அருண்பிரியா மருத்துவமனையில் குடல்வால் (அப்பன்டிஸ்) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கிஷோர் உயிரிழந்தார்.
12 வயது சிறுவனுக்கு வயதைக் கருத்தில் கொள்ளாமல் உடல் எடையை வைத்து அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்டதாகவும் தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை வழங்காமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டிய நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் கிஷோரின் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதார்,