கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி சேலத்தில் போராட்டம்

சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்துதல் கொடுத்த முதல்வரை கைது செய்யக்கோரி போராட்டம் நடந்தது.

Update: 2024-03-09 03:21 GMT

சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்துதல் கொடுத்த முதல்வரை கைது செய்யக்கோரி போராட்டம் நடந்தது.

சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்துதல் கொடுத்த முதல்வரை கைது செய்யக்கோரி நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ஞானசவுந்தரி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர்.

அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் அவர்களிடம் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து திடீரென அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கியும், இழுத்து சென்றும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மதியத்துக்கு பிறகு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News