திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார்.

Update: 2024-02-29 05:49 GMT

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கும் உரிமையையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்ட வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ‘கோ பேக் மோடி’ என கோஷமிட்டனர்.

இதில் பகுதி செயலாளர்கள் அப்பாஸ் மந்திரி, மதுரை வீரன், துணை தலைவர் அப்துல் ரகுமான், மச்சக்காளை, பாலா, மகிளா நிர்வாகி சுமதி, காஜாமைதீன், இளைஞர் நிர்வாகிகள் சாகுல் நவ்பீல், தேசிய ஒருமைப்பாட்டு இயக்க மாநில தலைவர் அப்துல் ஜாபர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News