பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் சார்பில் 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-29 01:35 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவகிருஷ்ணன் தலைமையில் 2 வது நாளாக ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.

தரையில் அமர்ந்து நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக தேர்தலுக்கு முன்பு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததை குறிப்பிட்டும், அதனை கடந்த மூன்று ஆண்டு காலமாக நிறைவேற்றாததை வலியுறுத்தியும் முழுக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News