ஆயக்குடியில் மாற்றுத்திறனாளியை வங்கியில் ஒப்படைக்கும் போராட்டம்
மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிக்கு ஆயக்குடி கிளையில் ஆதார் எண் இல்லை என்பதால் கடந்த ஆறு மாத காலமாக தமிழக அரசு உதவித்தொகை அரசு வழங்கியும் வங்கி பணத்தை வழங்காமல் நிறுத்தப்பட்டிருக்கிறது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 15:41 GMT
தமிழக அரசின் சார்பில் மாற்றத்திறனாளிகள் திட்டத்தில் மாதம் 2,000 ரூபாய் வங்கி மூலம் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமலட்சுமி என்ற மாற்றுத்திறனாளிக்கு ஆயக்குடி கிளையில் ஆதார் எண் இல்லை எனக் கூறி, 6 மாதங்களாக அரசு உதவித்தொகை ஒதுக்கப்பட்ட போதிலும், வங்கியில் பணத்தை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து ராமலட்சுமியின் பெற்றோர் பலமுறை வங்கியை அணுகியபோது உரிய பதில் அளிக்காமல் அலைக்கழித்துள்ளனர்.இதனை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஆயக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மாற்றுத்திறனாளி பெண்ணை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.