கற்கை நன்று அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

திருவள்ளூர் அருகே பேருந்து செல்லாத கிராமத்தில் பயிலும் 26 பள்ளி மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி கல்வி உபகரணங்களை கற்கை நன்று கிராம அறக்கட்டளை மூலம் சென்னை துணை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-06-09 16:21 GMT

உபகரங்கள் வழங்கல்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே வஞ்சிவாக்கத்தில் கற்கை நன்றே கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் ஆறாம் ஆண்டிற்கான கல்வி சீர் மற்றும் மிதிவண்டி வழங்கும் விழா பேரிடர் பல்நோக்கு மைய கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வீட்டிலிருந்து தினமும் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு நடந்தே சென்று வரும் பூவாமி கிராம பள்ளியை சேர்ந்த 26 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மையில் உள்ள 172 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் அடங்கிய கல்வி சீர் வழங்கப்பட்டது.

இதனை சென்னை துணை ஆட்சியர் தமிழ்ச்செல்வன்,சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் ஆகியோர் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டினை வஞ்சிவாக்கம் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

Tags:    

Similar News