சிவகங்கையில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கையில் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 13:50 GMT
மனுக்களை பெற்ற ஆட்சியர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் மக்களிடமிருந்து 386 மனுக்கள் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து 60 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.