கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கல்
கும்மிடிப்பூண்டி பகுதிகளின் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை எம்.எல்.ஏ கோவிந்தராஜன் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,பாதிரிவேடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பாதிரிவேடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாதிரிவேடு மாதர் பக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அச்சம நாயுடு கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 அரசு மேல்நிலைபள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் 844 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம் சாரதா முத்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாநெல்லூர் லாரன்ஸ், பாதிரிவேடு என்.டி.மூர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ்,பாஸ்கரன், துணை செயலாளர் ஏசுரத்தினம்,மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் விஜய் வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் கண்மணி பிரியா நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆரம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆரம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்பாக்கம் புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி, எளாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சுண்ணாம்புகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளை சேர்ந்த 421 மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ கோவிந்தராஜன் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் மணிபாலன், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், ஆரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எகுமதுரை மஸ்தான் , தோக்கம்மூர் மணி ஊராட்சி செயலர் சோபன் பாபு முன்னிலை வகித்தனர். விழா முடிவில் ஆரம்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவனனைந்த பெருமாள் நன்றி தெரிவித்தார்.