ரிஷிவந்தியத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்
Update: 2023-11-22 06:46 GMT
கல்வி உதவித்தொகை
கனரா வங்கி நிறுவனரின் 118வது பிறந்த நாளையொட்டி, ரிஷிவந்தியம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரிஷிவந்தியம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்க்குடி தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் கனரா வங்கி மேலாளர் லிங்கேஸ்வரன் முன்னிலை வகித்தார்.